தேசாந்திரிகள்


கோவில் கற்சிலைகளுக்கு
இலக்கியத் தாவணிச் சாற்றி மகிழ்
பல மனிதர்களைப் பார்
குழந்தைகளுக்குப் பெயரிடு
"பெண்ணே புறப்படு" என்றழை

கிலுகிலுப்பைகளின் இசைக்கு ஆடும்
கம்பிகளால் ஆன எலும்புப் பட்டாடை
தோல் பாவைக்கு வாய்த்தது
நான்தான், இங்குதான் இருக்கிறேன்
எப்பொழுதும்.

வெள்ளம் வரும் நதிக் கரைகளில்
மட்டுமே வீடுகள் அமைகின்றன
நதிக்கருகில் உள்ள காட்டில் சற்றும்
சத்தம் போட்டுப் பேசவேண்டாம்
மூங்கில் தண்டுகள் மென்மையானவை

தேநீர் ஆற்றித் தருகிறேன்
பத்திரமாகச் சென்று வா தேசாந்திரி

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

Rathnavel Natarajan said...

அருமை.
நன்றி.

Post a Comment