ஸ்ரீ அருணாச்சல மகாத்மியம் - பூர்வ பாகம் - அத்தியாயம் 2 (தொடர்)



द्वितीयोऽध्यायः
ब्रह्मविष्णुस्तुतिपूर्वकमरुणाचलेश्वरशङ्करस्यस्थावरलिङ्गमाहात्म्यवर्णनम्

த்விதீயோஅத்யாய:
ப்ரஹ்மவிஷ்ணுஸ்துதிபூர்வகமருணாசலேஸ்வரஸங்கரஸ்யஸ்தாவரலிங்கமாஹாத்ம்யவர்ணனம்

இரண்டாம் பாகம்
பிரம்மனும் விஷ்ணுவும் சிவனை வணங்குதல் மற்றும் சிவலிங்க மஹிமை

ब्रह्मोवाच
अथाऽहमुच्चरन्वेदानशेषैर्वदनैः शिवम्। अस्तौषं भक्तिसंपूर्णं कृत्वामानसमर्चनम्॥१॥
नमः शिवाय महते सर्वलोकैकहेतवे। येन प्रकाश्यते सर्वं घ्रीयते सततं नमः॥२॥
विश्वव्याप्तमिदं तेजः प्रकाशयतिसन्ततम्। नेक्षन्तेत्वद्दयाहीनाजात्यन्धाभास्करंयथा भूलिङ्गममलंह्येतद्दृश्यमध्यत्मचक्षुषा। अन्तःस्थं वा बहिःस्थं वा त्वभ्दक्तरैनुभूयते॥
अपरिच्छेद्यमाकारमन्तरत्मनि योगिनः।
तदेतत्तव देवेश ज्वलितं दर्पणो यथा॥
अथवाशाङ्करीशक्तिःसत्याऽणोरप्यणीयसी।
मत्तोनान्यतरःकश्चिद्यन्मय्यपिविलीयते अणुस्तेकरुणा पात्रंमहत्त्वंध्रुवमस्नुते।
नाधिकोऽस्तिपरस्त्वत्तोनात्तोऽपित्वदाश्रयात् त्वय्यर्पितं मनस्त्वत्तो न वियोगमपेक्षते।
वाचः कथं प्रवृत्तिः स्यात्तववैभवकीर्त्तीने स्वयमीशमहादेव प्रसीद भुवनाधिक।
आदिश प्रयतं भक्तमपेक्षितनियुक्तिषु॥६॥

ப்ரஹ்மோவாச
அதாஹமுச்சரன்வேதானஸேஷைர்வதனை: ஸிவம்| அஸ்தௌஷம் பக்திஸம்பூர்ணம் க்ருத்வாமானஸமர்சனம்||1||
நம: ஸிவாய மஹதே ஸர்வலோகைகஹேதவே| யேன ப்ரகாஸ்யதே ஸர்வம் க்ரீயதே ஸததம் நம:||2||
விஸ்வவ்யாப்தமிதம் தேஜ: ப்ரகாஸயதிஸன்ததம்| நேக்ஷன்தேத்வத்தயாஹீனாஜாத்யன்தாபாஸ்கரம்யதா பூலிங்கமமலம்ஹ்யேதத்த்ருஸ்யமத்யத்மசக்ஷுஷா| அன்த:ஸ்தம் வா பஹி:ஸ்தம் வா த்வப்தக்தரைனுபூயதே||
அபரிச்சேத்யமாகாரமந்தரத்மனி யோகின:|
ததேதத்தவ தேவேஸ ஜ்வலிதம் தர்பணோ யதா||
அதவாஸாங்கரீஸக்தி:ஸத்யாணோரப்யணீயஸீ|
மத்தோனான்யதர:கஸ்சித்யன்மய்யபிவிலீயதே அணுஸ்தேகருணா பாத்ரம்மஹத்த்வம்த்ருவமஸ்னுதே|
நாதிகோஅஸ்திபரஸ்த்வத்தோனாத்தோஅபித்வதாஸ்ரயாத் த்வய்யர்பிதம் மனஸ்த்வத்தோ ந வியோகமபேக்ஷதே|
வாச: கதம் ப்ரவ்ருத்தி: ஸ்யாத்தவவைபவகீர்த்தீனே ஸ்வயமீஸமஹாதேவ ப்ரஸீத புவனாதிக|
ஆதிஸ ப்ரயதம் பக்தமபேக்ஷிதனியுக்திஷு||6||

பிரம்மா உரைத்தார்-
நான்கு முகங்களாலும் சிவனை வணங்கி, வேத மந்திரங்களை ஜபித்து, அவரையே தியானித்து, என் மனதிற்குள்ளேயே அவரை பூஜித்தேன்.
ஹே. சிவபெருமானே. உங்கள் தேஜஸாலேயே இவ்வுலகமெங்கும் ஒளிர்கிறது. இந்த மூவுலகிற்கும் சர்வாதாரமான அப்படிப்பட்ட பரமாத்மாவின் முன் பணிகிறேன்.
கண்ணேயில்லாமல் பிறந்த குருடன் எப்படி சூரியனின் ஒளியைக் காணவியலாதோ, அதே போல உங்களது ஆசியும் கருணையும் பெறாதவர்கள் இந்தத் தேஜஸ்தம்பத்தின் பேரொளியைக் காணமுடியாது. இந்த பூலிங்கம் களங்கமற்றது. அந்தராத்மாவினால் மட்டுமே உணர்ந்து காணப்படுகின்ற இந்த லிங்கத்தைப் பற்றிய ஞானமானது உங்கள் பக்தர்களுக்கு ஆத்ம தரிசனமாகவோ அல்லது புறதரிசனமாகவோ கிட்டும்.
இந்த லிங்கமானது அளப்பறியது, கணக்கில்லா தூரங்களுக்கு பரந்து கிடக்கும் எல்லையில்லாத ஒன்றாகும்.
இந்த லிங்கம் ஒரு நிலைக்கண்ணாடியின் பிரதிபலிப்பு போலவே யோகிகளின் இதயத்தினுள்ளே ஒளிர்கிறது. தேவேசனே. இந்த லிங்கம் நீங்களேதான்.
இல்லையெனில் இல்லிங்கம் சங்கரனின் தேவியான சக்தியாகும்.
சூட்சுமத்திற்கெல்லாம் சூட்சுமமானது இது நீங்களேயன்றி வேறில்லை. இது போல வேறெங்குமில்லை, அப்படியேதும் இருப்பினுங்கூட அவை உங்களுக்குள்ளே ஒன்றிவிடும்.
உங்களருள் பெற்ற அற்பனுங்கூட புண்ணியனாகிறான். உங்களிடமிருந்து தனித்தது எதுவுமில்லை. உங்களினும் மேலானதெதுவுமில்லை.
நான் உங்கள் பாதம் பற்றி சரணடைந்தால், நான் சிறப்புறுகிறேன். என் சித்தம் எப்போது உங்களிடம் சரணடைகிறதோ, அதனின்றும் மாறாதிருக்கும். இப்படியிருக்கையில் எப்படி நான் என் பிரார்த்தனைகளை உங்களிடம் கூறுவது? எவ்வண்ணம் உங்கள் துதிகளைப் பாடுவது?
ஹே. ஈஸ்வரனே. உங்கள் கருணையை வேண்டுகிறேன். நீங்கள் எங்கும் நிறைந்திருக்கிறீர்கள். நீங்கள் விரும்பியவண்ணம் உங்கள் ஆசிகளை எனக்கு தருமாறு பிரார்த்திக்கிறேன்.

इदं विज्ञाप्य विनयान्नमस्कृत्वा पुनः पुनः।
प्रञ्ञलिर्देवेशं न्यषीदं सविधे विभोः॥
अथविष्णुर्नवाम्भोदगम्भीरध्वनिर्भ्यधात्।
वाचः कृतार्थयन्भूयः शुक्लाःशङ्करकीर्त्तनैः जय त्रिभुवनाधीश जय गङ्गाधार प्रभो।
जय नाथ विरूपाक्ष जय चन्द्रार्द्दशेखर॥
अव्याजममितं शम्भो कारुण्य तव वर्द्दते।
येननिर्धूतमखिलं भक्तेषु ज्ञानमाहितम्॥
पालनं सर्वविद्यानां प्रापणं भूतिसञ्चयः।
पुराणं च सुपुत्राणां पितुरेव प्रवर्धनम्॥
शतानामपि मूर्तीनामेकामपिनवैः स्त्वैः।
स्तोतुं न शक्नुमेशान्समवायस्तुकिम्पुनः॥
त्वमेव त्वामलं वेत्तुं यदि वा त्वत्प्रसादतः॥१६॥

இதம் விஜ்ஞாப்ய வினயான்னமஸ்க்ருத்வா புன: புன:|
ப்ரஞ்ஞலிர்தேவேஸம் ந்யஷீதம் ஸவிதே விபோ:||
அதவிஷ்ணுர்னவாம்போதகம்பீரத்வனிர்ப்யதாத்|
வாச: க்ருதார்தயன்பூய: ஸுக்லா:ஸங்கரகீர்த்தனை: ஜய த்ரிபுவனாதீஸ ஜய கங்காதார ப்ரபோ|
ஜய நாத விரூபாக்ஷ ஜய சந்த்ரார்த்தஸேகர||
அவ்யாஜமமிதம் ஸம்போ காருங்ய தவ வர்த்ததே|
யேனனிர்தூதமகிலம் பக்தேஷு ஜ்ஞானமாஹிதம்||
பாலனம் ஸர்வவித்யானாம் ப்ராபணம் பூதிஸஞ்சய:|
புராணம் ச ஸுபுத்ராணாம் பிதுரேவ ப்ரவர்தனம்||
ஸதானாமபி மூர்தீனாமேகாமபினவை: ஸ்த்வை:|
ஸ்தோதும் ந ஸக்னுமேஸான்ஸமவாயஸ்துகிம்புன:||
த்வமேவ த்வாமலம் வேத்தும் யதி வா த்வத்ப்ரஸாதத:||16||

இப்படியாக நான் அவரைக் குறித்து அவரருளுக்காக வேண்டியவண்ணமிருந்தேன்.
மீண்டும் மீண்டும் என் வேண்டுதல்களை அவரது சன்னிதானத்தில் வைத்து பிரார்த்தித்தேன்.
இப்படியிருக்கையில் விஷ்ணுவின் கம்பீரமான வாக்கு சங்கரரின் நாமங்களை சொல்லியவண்ணம் ஒலித்தது.
ஹே. முக்கண்ணனே. கங்கையின் நாயகனே. நீங்களே சர்வேசன். உங்களுக்கு ஜெயம் உண்டாகுக.
நீங்களே உயர்ந்தவர். கருமையான பெரிய கண்களையுடையவரே. சர்ப்பங்களை அணிந்தவரே. பிறை சூடியவரே.
ஹே சம்போ. எந்த பிரதிபலனும் பாராது உங்கள் கருணை தாரையாய் பொங்கி வருகிறது.
இதனால் உங்கள் பக்தர்கள் புண்ணியமடைந்து ஞானம் பெறுகிறார்கள்.
அவர்கள் அப்படிப் பெற்ற ஞானத்தையும் நீங்களே ரக்ஷிக்கிறீர்கள். நீங்களே லோகக்ஷேமத்திற்கு காரணம்.
நீங்களே புராணங்களாக இருக்கிறீர்கள். நீங்களே இவ்வுலகிலுள்ள ஜீவராசிகளை சிருஷ்டித்த தந்தை. நீங்களே இவ்வுலக நன்மைகளைப் பெருக்குகிறீர்கள்.
பல்வேறு ரூபங்களைப் பெற்றுள்ளீர்கள். அவற்றில் ஒன்றின் மீது கூட அதற்குண்டான புகழைப்பாட எனக்கு வார்த்தைகள் வரவில்லை.
அப்படியிருக்க எப்படி நான் உங்களைப் பற்றி பாடவியலும்?
உங்களைப் பற்றிய ஞானம் உங்களுக்கு மட்டுமே உள்ளது, அப்படி வேறு யாருக்கேனும் இருந்தால், உங்களின் கருணைக் கரங்கள் அவர் மீது கடாக்ஷிக்கப் பெற்றிருந்தால் மட்டுமே இயலும்.

देवास्त्वदंशसम्भूतिप्रभवोनभवन्तिकिम्।
अप्यायस्याग्निकीलस्यदाहशक्तिनंकिंभवेत् देशकालक्रियायोगाद्यथाऽग्नेर्भेदसम्भवः।
तथाविषयभेदेनत्वमेकोऽपि विभिद्यसे॥
अनुग्रहपरो देव मूर्तिं दर्शय शङ्कर।
आवयोरखिलाधार नयनानन्द्दायिनीम्॥१६॥

தேவாஸ்த்வதம்ஸஸம்பூதிப்ரபவோனபவன்திகிம்|
அப்யாயஸ்யாக்னிகீலஸ்யதாஹஸக்தினம்கிம்பவேத் தேஸகாலக்ரியாயோகாத்யதாக்னேர்பேதஸம்பவ:|
ததாவிஷயபேதேனத்வமேகோஅபி விபித்யஸே||
அனுக்ரஹபரோ தேவ மூர்திம் தர்ஸய ஸங்கர|
ஆவயோரகிலாதார நயனானன்த்தாயினீம்||16||

உங்களின் க்ஷேமலாபத்தால் மட்டுமே தேவர்கள் மேன்மை பெற்று அளவில்லா செல்வம் பெற்றார்கள்.
எப்படி அதிகமான நெருப்பு ஜ்வாலைக்கு அருகில் இருந்தால் அதீத தாகமெடுக்குமோ அதுபோல தேவர்கள் பேரு பெற்றார்கள். அக்னி சூழ்நிலை மற்றும் காலதேசத்தின் அடிப்படையில் தன் உருவை மாற்றிக் கொள்ளும்.
அதைப் போலவே, நீங்கள் ஒருவரே என்றாலும், விஷயத்தின் முக்கியத்துவம் மற்றும் பின்விளைவுகளை கொண்டு, வேறுபட்டு இருக்கிறீர்கள்.
கருணையின் வடிவமே. சங்கரா. உங்கள் அற்புதமான ரூபத்தை காணக் கொடுங்கள்.
சர்வாதாரமே. உங்கள் தரிசனத்தால் எங்கள் கண்கள் ஆனந்தம் பெறட்டும்.

एवं प्रणमतोर्देवः श्रद्धाभक्तिसमन्वितम्।
प्रससाद परं शम्भुःस्तुवतोरावयोर्द्वयोः॥
तेजस्तम्भात्पुनस्तस्माद्देवस्चन्द्रार्द्धशेखरः।
आविर्बभोत्रपुरुषःकपिलःकालकन्धरः॥२१॥

ஏவம் ப்ரணமதோர்தேவ: ஸ்ரத்தாபக்திஸமந்விதம்|
ப்ரஸஸாத பரம் ஸம்பு:ஸ்துவதோராவயோர்த்வயோ:||
தேஜஸ்தம்பாத்புனஸ்தஸ்மாத்தேவஸ்சந்த்ரார்த்தஸேகர:|
ஆவிர்பபோத்ரபுருஷ:கபில:காலகந்தர:||21||

இப்படியாக அவர் முன் நாங்கள் பக்தி சிரத்தையுடன் வேண்டி நின்றோம்.
சம்பு மகாதேவர் எங்களிடம் மீண்டும் கருணை கொண்டார்.
அக்னி ஸ்தூபமாக இருந்த பரமேஸ்வரன், மீண்டும் மகாதேவனாக பிறைசூடிக் காட்சியளித்தார்.
கருநிற மேனியோடும், நீலகண்டனாகவும் தன்னையே வெளிப்படுத்திக் கொண்டார்.

परशुं बालहरिणं करैरभयविश्रमौ।
दधानः पुरुषोऽवादीत्पुत्रावावामिति प्रभुः॥२२॥

பரஸும் பாலஹரிணம் கரைரபயவிஸ்ரமௌ|
ததான: புருஷோஅவாதீத்புத்ராவாவாமிதி ப்ரபு:||22||

ஒரு கையில் கோடாரியும், மறு கையில் மானும், அபயமுத்திரை காட்டியும்
எங்கள் முன் தோன்றி, மகாதேவன் உரைத்தார்: "குழந்தைகளே"

परितुष्टोऽस्मि युवयोर्भक्त्या युक्तात्मनोर्मयि।
भवतं सर्वलोकानां सृष्टिरक्षाधिपौ युवाम्॥२३॥

பரிதுஷ்டோஅஸ்மி யுவயோர்பக்த்யா யுக்தாத்மனோர்மயி|
பவதம் ஸர்வலோகானாம் ஸ்ருஷ்டிரக்ஷாதிபௌ யுவாம்||23||

உங்கள் சித்தம் என்னிடம் சரணடைந்தது கண்டும், உங்கள் பக்தியைக் கண்டும் மகிழ்கிறேன்.
நீங்கள் இவ்வுலகை படைக்கவும் மற்றும் காக்கவும் வேண்டி வரமளித்து ஆசீர்வதிக்கிறேன்.

युवयोरिश्टसिद्दयर्थमाविभुंतोऽस्म्यहं यतः।
वरंवृणुतन्मयञ्जहवरदोऽहमुपागतः॥२४॥

யுவயோரிஸ்டஸித்தயர்தமாவிபும்தோஅஸ்ம்யஹம் யத:|
வரம்வ்ருணுதன்மயஞ்ஜஹவரதோஅஹமுபாகத:||24||

நீங்கள் வேண்டும் வரத்தை கேளுங்கள்.
நான் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றவும், உங்களுக்கு வேண்டிய வரமளிக்கவே வந்துள்ளேன்.

इति देवस्य वचनात्सुप्रीतौ च कृताञ्चली।
विज्ञापयामासतुस्तौस्वंस्त्रमर्थपृथक् कृथक् अहं मन्त्रैः शिशुप्रायजगत्त्रयविधायकः।
संस्तुवन्वैदिकैर्मन्त्रैरीशानमपरजितम्॥
नमस्येऽमिदं रूपं शस्वद्वरदमीश्वरम्।
तेजोमयं महादेवं योगिध्येयं निरञ्जनम्॥२७॥

இதி தேவஸ்ய வசனாத்ஸுப்ரீதௌ ச க்ருதாஞ்சலீ|
விஜ்ஞாபயாமாஸதுஸ்தௌஸ்வம்ஸ்த்ரமர்தப்ருதக் க்ருதக் அஹம் மந்த்ரை: ஸிஸுப்ராயஜகத்த்ரயவிதாயக:|
ஸம்ஸ்துவன்வைதிகைர்மந்த்ரைரீஸானமபரஜிதம்||
நமஸ்யேஅமிதம் ரூபம் ஸஸ்வத்வரதமீஸ்வரம்|
தேஜோமயம் மஹாதேவம் யோகித்யேயம் நிரஞ்ஜனம்||27||

இவ்வார்த்தைகளைக் கேட்டவுடன், நாங்கள் இருவரும் மகிழ்ந்து, எங்களுக்கு வேண்டியவற்றைக் கேட்டு வேண்டினோம். நாங்கள் சிவனை வணங்கி நின்றோம்.
நாங்கள் தனித் தனியாக எங்கள் பிரார்த்தனைகளை சமர்பித்தோம். ஒரு தாயிடம் குழந்தை எப்படி சரணடைது இருக்கிறதோ, மூவுலகையும் காக்கும் பொறுப்பிலுள்ள நான், அவர் முன் சரணடைந்தேன்.
வேத மந்திரங்களை உச்சாடனம் செய்து, அழிவில்லா அபராஜித மூர்த்தியான சிவனின் ரூபத்தை வணங்கினேன்.
"ஓ ஈஸ்வரா! நீயே தயாளன். நீ கருணை கொண்டதால் எனக்கு வேண்டும் வரமருளினாய். உன்னை நான் வணங்குகிறேன்.
உன் மஹிமை அளவிலாதது. நீயே தேவர்களுக்கெல்லாம் தேவன். நீ யோகிகளால் பூஜிக்கப்படுபவன். நீ களங்கமில்லாதவன்.

आपूर्यमणंभवता तेजसा गगनान्तरम्।
परिपृच्छयः सुरावासःक्षणाद्देव भविष्यति सिद्दाचारणगन्धर्वा देवाश्च परमर्षयः।
नावसन्दिवि सङ्चारं लभेरंस्तेजसा तव॥
पृथ्वी च सकला चैव तप्यमाना तवौजसा।
चराचरसमुत्पत्तिक्षमा नेव भविष्यति॥३०॥

ஆபூர்யமணம்பவதா தேஜஸா ககனான்தரம்|
பரிப்ருச்சய: ஸுராவாஸ:க்ஷணாத்தேவ பவிஷ்யதி ஸித்தாசாரணகந்தர்வா தேவாஸ்ச பரமர்ஷய:|
நாவஸன்திவி ஸங்சாரம் லபேரம்ஸ்தேஜஸா தவ||
ப்ருத்வீ ச ஸகலா சைவ தப்யமானா தவௌஜஸா|
சராசரஸமுத்பத்திக்ஷமா நேவ பவிஷ்யதி||30||

பூமி, பூமியில் உள்ள அனைத்தும் மற்றும், அண்ட ஆகாசங்களெல்லாம் உன் தேஜசால் ஒளிர்கின்றன.
தேவா! தேவலோகமோ என்று சந்தேகிக்கும்படி இருக்கிறதால், சித்தர்கள், சாரணர்கள், கந்தர்வர்கள், தேவர்கள், பிரம்ம ரிஷிகள் போன்றோர் சுவர்க்கத்தை விட்டு,
அனைத்து ரிஷிக்களும் பூமிக்கு வந்து, இதுதான் சொர்க்கமோ எனக் கருதி அலைந்து திரிகின்றனர்.
உன் தேஜசால் அண்டத்தின் வெப்பம் கூடியுள்ளது.
எல்லை கடந்த இவ்வெப்பத்தால் உலகே நாசமடைந்து விடும். அசைவது, அசையாது அனைத்தையும் சீர் குலைத்து விடும். அவற்றை மீண்டும் நிர்மாணிப்பது இயலாது.

उपसंहृत्य तेजः स्वमरुणाचलसञ्ज्ञया।
भवस्थावरलिङ्गं त्वं लोकानुग्रहकारणात्॥
ज्योतिम्मयमिदंरूपमरुंणाचल्सञ्ज्ञितम्।
ये नमन्तिनराभवक्तय्यातेभवन्त्यमराधिकाः सेवन्तांसकलालोकाः सिद्धाश्चपरमर्षयः।
गणाश्चविविधाभूमौमानुषंभावमास्थिताः
दिव्यारामसमुद्भूतकल्पकाद्याः सुरद्र्माः।
सेविनस्त्वांप्ररोहन्तुभरिता विविधैःफ़लै
दिव्यौषधिगणास्सर्वेसिंघाद्यमृगजातयः।
प्रशान्ताः परिवर्त्तन्तां पापकल्मशनाशन।
अयन्द्वयभिन्नेन गमनेनाऽपि संयुतः।
न लङ्घयिष्यति रविः श्रृङ्गं लिङ्गतनोस्तव।
दिव्यदुन्दुभिशङ्खानां घोषैः पुष्पौघवृष्टिभिः।
सेवितो भव देव त्वमप्सरोनृत्यगीतिभिः॥३७॥

உபஸம்ஹ்ருத்ய தேஜ: ஸ்வமருணாசலஸஞ்ஜ்ஞயா|
பவஸ்தாவரலிங்கம் த்வம் லோகானுக்ரஹகாரணாத்||
ஜ்யோதிம்மயமிதம்ரூபமரும்ணாசல்ஸஞ்ஜ்ஞிதம்|
யே நமந்தினராபவக்தய்யாதேபவன்த்யமராதிகா: ஸேவன்தாம்ஸகலாலோகா: ஸித்தாஸ்சபரமர்ஷய:|
கணாஸ்சவிவிதாபூமௌமானுஷம்பாவமாஸ்திதா:
திவ்யாராமஸமுத்பூதகல்பகாத்யா: ஸுரத்ர்மா:|
ஸேவினஸ்த்வாம்ப்ரரோஹன்துபரிதா விவிதை:பலை
திவ்யௌஷதிகணாஸ்ஸர்வேஸிம்காத்யம்ருகஜாதய:|
ப்ரஸான்தா: பரிவர்த்தன்தாம் பாபகல்மஸனாஸன|
அயன்த்வயபின்னேன கமனேனாபி ஸம்யுத:|
ந லங்கயிஷ்யதி ரவி: ஷ்ருங்கம் லிங்கதனோஸ்தவ|
திவ்யதுன்துபிஸங்கானாம் கோஷை: புஷ்பௌகவ்ருஷ்டிபி:|
ஸேவிதோ பவ தேவ த்வமப்ஸரோன்ருத்யகீதிபி:||37||

அதனால், உன் தேஜசை உள்ளடக்கி, அருணாசலம் என்ற பெயருடன், ஹே சஞ்சயா, ரக்ஷகா.
உலகைக் காக்கும் பொருட்டு, ஸ்தாவர லிங்கமாக தோற்றங்கொள்ளவும்.
அருணாசலம் பேரொளியுடன் ஒளிர்கிறது.
அவன் முன் யார் சரணடைகிறாரோ, முழு பக்தியுடன் வணங்குகின்றாரோ, அவர் அமரர்கள், சித்தர்கள் பரம ரிஷிகள் ஆகியோரைவிட மேன்மையான நிலை பெறுவார்கள். மேலும்,
அனைத்து தேவ-கணங்களும் மானிடப் பிறப்பு கொண்டு இந்த லிங்கத்தை வணங்குவார்கள்.
தேவலோகத்தின் சிறந்த மரமான, வேண்டியதைக் கொடுக்கும் கற்பக விருக்ஷம் போன்ற மரங்கள் இங்கு செழிக்கட்டும்,
மேலும் சிறந்த பல்சுவை பழங்களைக் கொடுத்து, இத்தலத்திற்கு வளமையூட்டி, மானுடர்களுக்கு விரும்பியதை எல்லாம் கொடுக்கட்டும்.
கொடிய மிருகங்கள் மற்றும் சிங்கம்-புலி போன்ற காட்டு விலங்குகள் இங்கே சுதந்திரமாக உலவட்டும்,
அவை தம் இனங்களோடு இணைந்து சுதந்திரமாகவும், அமைதியாகவும் இங்கே வாழட்டும்.
தக்ஷிணாயனம் உத்திராயணம் என்ற அயனங்களின் அடிப்படையில் மாற்றத்திற்குள்ளாகும் ஒளிபெற்ற சூரியன்கூட,
உன் முடியை அடையவோ, லிங்கரூபனே! உன் உச்சியைத் தாண்டிச் செல்லவோ முடியாது.
இனிய நாதமுடைய துந்துபிகளும், மங்கலமான ஒலியுடன் கூடிய ஒளிமிகு சங்க நாதமும் ஒலிக்க, அபரிமிதமான புஷ்பங்களுடனும் பூஜை செய்யப்படவேண்டும்.
தேவா! இதுபோலவும், அப்சரசுகளின் சீர்மிகு அழகிய நாட்டியங்களோடும் உன்னை நாங்கள் பூஜிக்க வேண்டும்.

अमरत्वञ्च वशित्वञ्चसौभाग्यंकालवञ्चनम्।
त्वामाश्रित्यनरास्सर्वे लभन्तामरुणाचल सर्वावयवदानेन सर्वव्याधिविनाशनात्।
सर्वाभीष्टप्रदानेन दॄश्यो भव महीतले॥
तथेति वरदं देवमरुणाद्रिपतिंशिवम्।
प्रणम्य कमलानाथः प्रार्थयन्निदमब्रवीत्॥
प्रसीद करुणापूर्ण शोणशैलेश्वर प्रभो।
महेश सर्वलोकानां हिताय प्रकटोदय॥
यदाऽहं त्वामुपाश्रित्यजगद्रक्षणदक्षिणः।
श्रीपतित्वमनुप्राप्तस्तदा भक्ता भवन्तु ते॥
नाल्पापुण्यैरुपास्येत त्वद्रूपं महदद्भुतम्।
मया च ब्रह्मणा चैवमदॄष्टपदशेखरः॥४४॥

அமரத்வஞ்ச வஸித்வஞ்சஸௌபாக்யம்காலவஞ்சனம்|
த்வாமாஸ்ரித்யனராஸ்ஸர்வே லபன்தாமருணாசல ஸர்வாவயவதானேன ஸர்வவ்யாதிவினாஸனாத்|
ஸர்வாபீஷ்டப்ரதானேன த்ரூஸ்யோ பவ மஹீதலே||
ததேதி வரதம் தேவமருணாத்ரிபதிம்ஸிவம்|
ப்ரணம்ய கமலானாத: ப்ரார்தயன்னிதமப்ரவீத்||
ப்ரஸீத கருணாபூர்ண ஸோணஸைலேஸ்வர ப்ரபோ|
மஹேஸ ஸர்வலோகானாம் ஹிதாய ப்ரகடோதய||
யதாஹம் த்வாமுபாஸ்ரித்யஜகத்ரக்ஷணதக்ஷிண:|
ஸ்ரீபதித்வமனுப்ராப்தஸ்ததா பக்தா பவன்து தே||
நால்பாபுங்யைருபாஸ்யேத த்வத்ரூபம் மஹதத்புதம்|
மயா ச ப்ரஹ்மணா சைவமத்ரூஷ்டபதஸேகர:||44||

உன்னைச் சரணடைந்தவர்களுக்கு அமரத்துவம், சித்தி, அதிருஷ்டம், பேரின்பநிலை, மோக்ஷம்யாவையும் பெறுவார்கள்.
ஹே அருணாச்சலா! உன்னை நாடி வருபவர்கள், வேண்டும் வரம் பெற்றவராகத் திரும்புவார்கள், அவயக் குறைகள் நீங்கி, அவர்கள் துன்பம் தீரட்டும்.
மேலும் அவர்கள் விரும்பியதெல்லாம் கிடைக்கப் பெறுமாறு அவர்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றி நீ இருப்பதைத் தெரிவிக்க வேண்டும்.
அப்படியே ஆகட்டும் என்று கூறி, சிவபெருமான் நான் கேட்ட அனைத்தையும் வரமளித்தார்.
கமலாநாதனான விஷ்ணு அவர் முன் பணிந்து இவ்வாறு வேண்டினார்.
கருணாமூர்த்தியே! சோணாசலா! எனக்கு அருள் புரி.
உலகம் உய்யவே நீ வெளிப்பட்டு இங்கு வந்துள்ளாய்.
உலகை இரக்ஷிக்கும் என் பொறுப்பை நிறைவேற்றும் திறனும், உனது ஆசி எனும் நிழலும் எனக்கு வரமாகியுள்ளது.
இதையே உன்னையே நாடி வரும், உன் பக்தர்கள் அனைவருக்கும் வரமளி" என்று ஸ்ரீபதி வேண்டினார்.
அற்புதமான உனது இந்த ரூபத்தை சாதாரணர்களால் போற்றவோ, உபாசிக்கவோ அல்லது தியானிக்கவோ முடியாது.
தலைவா! அளவிடமுடியாத உன் ரூபத்தை என்னாலோ அல்லது பிரம்மாவினால் கூட காணமுடியவில்லை.

प्रदक्षिणानमस्कारैर्नृत्यगीतैश्च पूजनैः।
त्वामर्चयन्ति ये मर्त्योः कृतार्थास्तेगतांहसः उपवासैर्व्रतैः मन्त्रैरुपहारैस्तथाऽर्चनैः।
त्वामर्चयन्ति मनुजाः सार्वभौमा भवन्तु ते आरामं मण्डपञ्चाऽपि कूपं विधिविशोधनम्।
कुर्वतामरुणाद्रीशसन्निधाने पुनर्भव अङ्गप्रदक्षिणं कुर्वन्नश्टैश्वर्यसमन्वितः।
अशेषपातकः सद्यो विमुक्तो निर्मलाशयः॥
आवाम्प्यविमुञ्चन्तौ सदावत्पादपङ्कजम्।
ध्यातव्यंमनुजैःसर्वैस्तवसन्निधिमागतैः तथाऽस्त्विति बरं दत्त्वाविष्णवे चन्द्रशेखरः।
अरुणाचरूपेणप्राप्तःस्थावरलिङ्गताम् तैजसं लिङ्गमेतद्धिसर्वलोकैककारणम्।
अरुणाद्रिरिति ख्यातं दॄश्यते वसुधातले॥
युगान्त्समये क्षुब्धैश्चतुर्भिरपि सागरैः।
अपि निर्मग्नलोकान्तैरस्पृष्टान्तिकभूतलम् गजप्रमाणैः पृषतैः पूरयन्तो जगत्त्रयम्।
पुष्कराद्या महामेघा विश्रान्ता यस्यसनुनि प्रवृत्ते भूतसंहारे प्रकृतौ प्रतिसञ्चरे।
भविष्यत्सर्वंबीजानि निषेदुर्यत्र निश्चयम्॥
मया चाहुयमानेभ्यः प्रलयानन्तरं पुनः।
यत्पादसेविविप्रभ्यो वेदाध्ययनसंग्रहः॥
सर्वसामपि विद्यानां कलानां शास्त्रसम्पदाम्।
आगमानञ्च वेदानां यत्र सत्यव्यवस्थितिः॥५६॥

ப்ரதக்ஷிணானமஸ்காரைர்ன்ருத்யகீதைஸ்ச பூஜனை:|
த்வாமர்சயன்தி யே மர்த்யோ: க்ருதார்தாஸ்தேகதாம்ஹஸ: உபவாஸைர்வ்ரதை: மந்த்ரைருபஹாரைஸ்ததார்சனை:|
த்வாமர்சயன்தி மனுஜா: ஸார்வபௌமா பவன்து தே ஆராமம் மங்டபஞ்சாபி கூபம் விதிவிஸோதனம்|
குர்வதாமருணாத்ரீஸஸன்னிதானே புனர்பவ அங்கப்ரதக்ஷிணம் குர்வன்னஸ்டைஸ்வர்யஸமந்வித:|
அஸேஷபாதக: ஸத்யோ விமுக்தோ நிர்மலாஸய:||
ஆவாம்ப்யவிமுஞ்சந்தௌ ஸதாவத்பாதபங்கஜம்|
த்யாதவ்யம்மனுஜை:ஸர்வைஸ்தவஸன்னிதிமாகதை: ததாஸ்த்விதி பரம் தத்த்வாவிஷ்ணவே சந்த்ரஸேகர:|
அருணாசரூபேணப்ராப்த:ஸ்தாவரலிங்கதாம் தைஜஸம் லிங்கமேதத்திஸர்வலோகைககாரணம்|
அருணாத்ரிரிதி க்யாதம் த்ரூஸ்யதே வஸுதாதலே||
யுகான்த்ஸமயே க்ஷுப்தைஸ்சதுர்பிரபி ஸாகரை:|
அபி நிர்மக்னலோகான்தைரஸ்ப்ருஷ்டான்திகபூதலம் கஜப்ரமாணை: ப்ருஷதை: பூரயன்தோ ஜகத்த்ரயம்|
புஷ்கராத்யா மஹாமேகா விஸ்ரான்தா யஸ்யஸனுனி ப்ரவ்ருத்தே பூதஸம்ஹாரே ப்ரக்ருதௌ ப்ரதிஸஞ்சரே|
பவிஷ்யத்ஸர்வம்பீஜானி நிஷேதுர்யத்ர நிஸ்சயம்||
மயா சாஹுயமானேப்ய: ப்ரலயானன்தரம் புன:|
யத்பாதஸேவிவிப்ரஏப்யோ வேதாத்யயனஸம்க்ரஹ:||
ஸர்வஸாமபி வித்யானாம் கலானாம் ஸாஸ்த்ரஸம்பதாம்|
ஆகமானஞ்ச வேதானாம் யத்ர ஸத்யவ்யவஸ்திதி:||56||

எவர் உன்னை பிரதக்ஷிணம், நமஸ்காரம் செய்கிறாரோ, நாட்டியம் மற்றும் சங்கீதங்களால் உன்னைப் போற்றுகிராரோ, உன்னை பரம பக்தியோடு வணங்குகிறாரோ,
உன் தரிசனத்திற்காக ஏங்குகிறாரோ, உபவாசமிருந்து உன்னை உபாசிக்கிறாரோ, பூஜா மந்திரங்கள் சொல்லி, உன் பெயரை பக்தியுடன் ஜபித்து,
மேலும் சத்திரங்கள், ஓய்வுக் கூடங்கள், மண்டபம், சோலைகள், நீர்ச்சுனை-கிணறுகள், குளங்கள் ஏற்படுத்தி மேம்பாட்டுக் காரியங்கள் செய்கிறாரோ,
போன்றவற்றை உன் சந்நிதியில் யார் கட்டுகிறார்களோ, தத்துவார்த்த விஷயங்களைப் பற்றிய ஆராய்ச்சிகள், அங்கப்பிரதக்ஷிணங்கள் போன்றவற்றைச் செய்கிறார்களோ, அவர்கள் வெற்றி பெற்று, அதிகாரம் கொண்டவர்களாகவும் மேன்மை பொருந்தியவர்களாகவும் ஆவார்கள். அவர்தம் வாழ்வில் சுபிட்சமும், ஆற்றல், அதிபதித்துவம், உலக செளக்கியங்கள், வைபவம், தனம், புகழ், பேராற்றல், சர்வவியாபம் ஆகிய அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெறுவார்கள்.
அவர்தம் பாவங்கள் அழிந்து அவர் புனிதத்துவம் பெற்று நிர்மலமாகிறார்.
எங்களுக்கு நிழல் தரும் உனது பாதக்கமலங்களில்
எப்போதும் பக்தர்களின் தியானம் அமைந்திருக்கட்டும்.பகவான் சந்திரசேகரன் "அப்படியே ஆகுக!" என்று ஆசிர்வதித்து விஷ்ணு வேண்டியவற்றை அருளினார்.
இப்படியாக, அருணாசலேஸ்வரர் தம்மையே ஸ்தாவர லிங்கமாகத் தோன்றி, தேஜோமயமாகவும், புராதனமாகவும், ஸர்வலோகாதாரமாகவும் வெளிப்படுத்தினார்.
இந்த லிங்கமே பூமியில் அருணாத்ரி என்றழைக்கப்படுகிறது.
ஊழிக்காலத்தில் நான்கு சமுத்திரங்களும் இடம் மாறி, பெரும் பிரளயம் உண்டாகி நீர்நிலைகள் உயர்ந்து,
இவ்வுலகம் நாசமடைந்தாலும், இவ்விடம் நிலைப்பெற்று, அழிவின்றி இருக்கும். உலமே ஜலப்பிரளயத்தில் மூழ்கும் போதும், மூவுலகின் மீதும் யானையின் தும்பிக்கையிலிருந்து வேகமாகப் பாயும் நீர்போல மேகங்கள் பெருமழையை வர்ஷிக்கும் போதும்,
யோககாலம் மேகமூட்டங்கள் போல இம்மலையின் சாரலில் தவழ்ந்து கொண்டிருக்கும். மஹாபூதர்கள் துவம்சம் செய்யப்பட்டு, பூலோகம் அமைதியுற்று சாந்தி பெறும்.
இதற்கெல்லாம் பிறகு சகல ஜீவராசிகள் உய்திருப்பது குறைந்து, நிச்சயம் அழிந்து விட்டிருக்கும்.
பிரளயத்திற்குப் பிறகு, நானே வேண்டி விரும்பி, இவர்களை அழைப்பேன்.
அருணாத்ரீசனை சேவிக்கும் கற்றறிந்த வேத விற்பன்னர்கள், மீண்டும் வேத அத்யயனம் செய்யும்படியான ஞானத்தைப் பெறுவார்கள்.
மீண்டும் எல்லாம் செழித்தோங்கி, ஞானம் பெற்று, நம்பிக்கையும் பரம்பரையாக தழைத்து வளர்ந்து விஞ்ஞானமும் சாஸ்திரங்களும் க்ஷேமம் பெறும்.
வேதங்கள் மீண்டும் இங்கே தழைத்தோங்கும்.

यद्गुहागह्वरान्तस्था मुनयः शंसितव्रताः।
जटिनः सम्प्रकाशन्ते कोटिसूर्याग्नितेजसः पञ्चब्रह्ममयैर्मन्त्रैः पञ्चाक्षरवपुर्धरैः।
अकारपीठिकारूढो नादात्मा यः सदाशिवः॥
अष्टभिश्च सदा लिङ्गैरष्टदिक्पालपूजितः।
अष्टमूर्त्तितया योऽयमष्टसिद्धिप्रदायकः॥
यत्र शिद्धास्तथालोकान्स्वान्स्वान्मुक्त्वा सुरेश्वराः।
अपेक्षन्ते स्थिता मुक्ति विहाय कन्काचलम्॥६०॥

யத்குஹாகஹ்வரான்தஸ்தா முனய: ஸம்ஸிதவ்ரதா:|
ஜடின: ஸம்ப்ரகாஸன்தே கோடிஸூர்யாக்னிதேஜஸ: பஞ்சப்ரஹ்மமயைர்மந்த்ரை: பஞ்சாக்ஷரவபுர்தரை:|
அகாரபீடிகாரூடோ நாதாத்மா ய: ஸதாஸிவ:||
அஷ்டபிஸ்ச ஸதா லிங்கைரஷ்டதிக்பாலபூஜித:|
அஷ்டமூர்த்திதயா யோஅயமஷ்டஸித்திப்ரதாயக:||
யத்ர ஸித்தாஸ்ததாலோகான்ஸ்வான்ஸ்வான்முக்த்வா ஸுரேஸ்வரா:|
அபேக்ஷன்தே ஸ்திதா முக்தி விஹாய கந்காசலம்||60||

இந்த மலையிலுள்ளக் குகைகள் மஹரிஷிக்களுக்கும், பரம்மச்சாரிகளுக்கும்
நீண்ட ஜடாமுடியுடைய முனிவர்களுக்கும் இருப்பிடமாக இருக்கும். இந்தப் புண்ணியர்களின் தேஜஸ், ஒரே நேரத்தில் ஒளிரும் கோடி சூரியர்களுக்கு ஒப்பாக இருக்கும். ப்ரஹ்மமயமான அவர், ந-ம-சி-வா-ய என்ற பஞ்சாட்சர மந்திரத்துள்ளும்,
சதாசிவம் என்றழைக்கப்படுபவருமான அவர், ஒலியெல்லாவற்றிற்கும் அடிப்படையானதும், வேதங்களின் ஆதாரமானதுமான "அ" என்ற ப்ரணவ பீடத்தில் அமர்ந்துள்ளார்.
மேலும், எட்டு விதமாக, ஸர்வ என்ற பூமி லிங்கம், பவ என்ற ஜல லிங்கம், ருத்ர என்ற அக்னி லிங்கம், உக்ர என்ற வாயு லிங்கம், பீம என்ற ஆகாச லிங்கம், பசுபதி என்ற யஜமான லிங்கம், மகாதேவ என்ற சந்திர லிங்கம், ஈசான என்ற சூரிய லிங்கம், ஆகியவை அஷ்டதிக்பாலர்களால் வணங்கப்படுகின்றன.
அவர், எட்டுவிதமான சிலாரூபங்களில், வேண்டுவோருக்கு அஷ்டசித்திக்களையும் அருளும் தெய்வமாக இருக்கிறார்.
தேவலோகத்தின் மஹாசித்தர்கள் அருணகிரியின் மீது தியானம் செய்கிறார்கள், மேலும்
மோக்ஷத்திற்கான விருப்பம் ஏதுமின்றி, ஸ்வர்ணம் போல ஜ்வலிக்கும் இம்மலையிலேயே தங்கிவிடுகின்றனர்.

एवं वसुन्धरापुण्यपरिपाकसमुच्चयः।
अरुणाद्रिरिति ख्यातो भक्तभक्तिवरप्रदः॥
कैलासान्मेरुशिखरादागतैर्देवसञ्चपैः।
पूज्यते शोणशैलात्मा शम्भुः सर्वंवरप्रदः॥
इति कमलजवक्त्रपद्माजातं मुदितमनाः सनको निशम्य भक्तया।
विरचितविनयः प्रणम्य पुत्रः पितरमपृच्छदशषवेदसारम्॥६३॥

ஏவம் வஸுன்தராபுங்யபரிபாகஸமுச்சய:|
அருணாத்ரிரிதி க்யாதோ பக்தபக்திவரப்ரத:||
கைலாஸான்மேருஸிகராதாகதைர்தேவஸஞ்சபை:|
பூஜ்யதே ஸோணஸைலாத்மா ஸம்பு: ஸர்வம்வரப்ரத:||
இதி கமலஜவக்த்ரபத்மாஜாதம் முதிதமனா: ஸனகோ நிஸம்ய பக்தயா|
விரசிதவினய: ப்ரணம்ய புத்ர: பிதரமப்ருச்சதஸஷவேதஸாரம்||63||

இப்படியாக அனைத்து பாக்கியங்களும் அதிர்ஷ்டங்களும் ஒருசேர இம்மலையில் கிடைக்கப் பெறுகின்றன.
அருணாத்ரீ என்றழைக்கப்படும் இம்மலை பக்தர்களுக்கு பக்தியின் வரமளிக்கிறது.
கைலாஸத்தினின்றும் தேவகணங்கள் எல்லாம் இங்கு வந்து
சோணாசலமாகவிருக்கும் சம்புவை அருணகிரியில வணங்கி பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொண்டு வரம் பெறுகிறார்கள்.
இப்படியாகப் பணிவுடன், பத்மாஸனத்தில் அமர்ந்திருந்த ப்ரம்மனின் வார்த்தைகளைக் கேட்ட ஸனகர், உணர்ச்சிப் பெருக்கும் ஆர்வமும் கொண்டார்.
மேலும் தன் தந்தையாரிடம் வேதசாரங்களையும் விவரிக்குமாறும் வேண்டினார்.

इति श्रीस्कान्दे महापुराण एकाशीतिसाहस्यां संहितायां प्रथमे माहेश्वरखण्डे
अरुणाचलमाहात्म्ये पूर्वार्धे ब्रह्मविष्णुस्तुतिपूर्वकं शङ्करस्य स्थावरलिङ्गमाहात्म्यवर्णनं नाम द्वितीयोऽध्यायः॥२॥

இதி ஸ்ரீஸ்காந்தே மஹாபுராண ஏகாஸீதிஸாஹஸ்யாம் ஸம்ஹிதாயாம் ப்ரதமே மாஹேஸ்வரகங்டே
அருணாசலமாஹாத்ம்யே பூர்வார்தே ப்ரஹ்மவிஷ்ணுஸ்துதிபூர்வகம் ஸங்கரஸ்ய ஸ்தாவரலிங்கமாஹாத்ம்யவர்ணனம் நாம த்விதீயோஅத்யாய:||2||

மஹேஸ்வரக் காண்டம், ஸ்கந்த மஹாபுராணத்தின் முதற்பாகம், வேண்டியவருக்கு வேண்டும் வரமருளும் சிவபெருமானின் அதிசத்துவ குணாதியங்களை விவரிக்கிறது.
அருணாசல மஹாத்மியத்திலுள்ள பூர்வ பாகத்தின், இரண்டாவது அத்தியாயம் பிரம்மாவும் விஷ்ணுவும் சங்கரனை ஸ்தாவர லிங்கமாகக் கண்டதன் வர்ணனை. முற்றியது.

4 comments:

எல் கே said...

சம்போ மகாதேவா !

ஸ்வாமி ஓம்கார் said...

ஷம்போ மஹாதேவா! ;)

நசரேயன் said...

அரோகரா .. அரோகரா ..

இடையிலே சிலேபி எல்லாம் வருது

R. Gopi said...

நான் சொல்ல வருவதை செய்வது கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும் சொல்லி விடுகிறேன்.

சமஸ்க்ருதம் தெரியாத ஆனால் transliteration செய்தால் படிக்கக் கூடிய என்னைப் போன்ற ஆட்கள் செய்யும் ஒரு தவறு உச்சரிப்பு. நீங்கள் நிறைய புத்தகங்களில் பார்த்திருப்பீர்கள். எழுத்திற்கு மேலேயோ கீழேயோ ஒரு எண்ணைக் கொடுத்திருப்பார்கள். அதைக் கொண்டு கொஞ்சம் உச்சரிப்பு தவறில்லாமல் படிக்கலாம்.

சொல்ல வந்ததை சொல்லி விட்டேன். இனி சிவன் பாடு. உங்கள் பாடு.

மற்றபடி பதிவு ஜோர் என்று சம்பிரதாயமாக சொல்லத் தோன்றவில்லை. இது பதிவில்லை. இறைத்தொண்டு.

நானும் எதைப் பற்றியாவது எழுதலாம் என்ற ஊக்கத்தை இந்தப் பதிவு தருகிறது.

Post a Comment