மௌனம்

ஒவ்வொரு உந்தலுக்கும் கிரீச்சிடும்
ஊஞ்சல்
கட்டிய கூடத்தில்
ஓயாத தொலைக்காட்சியின் அலறல் மீறி
ஜன்னல் வழி பாயும் வாகன
அலைகளின் ஓலம் தாண்டி
ஈட்டிப் போல குத்தும் சில
மானுட குரல்கள் தாங்கி
எப்போதும் நடக்கும் பல
தெருச் சண்டைகள் சுமந்து வரும்
காற்றின் சப்தம் கூட இன்றில்லை!
மரணித்தே
விட்டேனோ?

===================================

Version 2

ஒவ்வொரு உந்தலுக்கும் கிரீச்சிடும்
ஊஞ்சல்
கட்டிய கூடத்தில்
ஓயாத தொலைக்காட்சியின் அலறல் மீறி
ஜன்னல் வழி பாயும் வாகன
அலைகளின் ஓலம் தாண்டி
ஈட்டிப் போல குத்தும்
மானுட குரல்கள் தாங்கி
எப்போதும் நடக்கும்
தெருச் சண்டைகள் சுமந்து வரும்
காற்றின் சப்தம் கூட இன்றில்லை!



.

6 comments:

அகநாழிகை said...

நல்ல கவிதை.

//ஒவ்வொரு உந்தலுக்கும் கிரீச்சிடும்
ஊஞ்சல் கட்டிய கூடத்தில்
ஓயாத தொலைக்காட்சியின்
அலறல் மீறி
ஜன்னல் வழி பாயும் வாகன
அலைகளின் ஓலம் தாண்டி
ஈட்டிப் போல குத்தும் சில
மானுட குரல்கள் தாங்கி
எப்போதும் நடக்கும் பல
தெருச் சண்டைகள் சுமந்து வரும்
காற்றின் சப்தம் கூட
இன்றில்லை!
மரணித்தே விட்டேனோ? //

இப்படியிருந்தால் வாசிப்பின் சுவாரசியம் கூடியிருக்குமென்று நினைக்கிறேன்.
தொடர்ந்து எழுதுங்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

நசரேயன் said...

அதுதான் நகர வாழ்க்கை

Vidhoosh said...

நன்றி நசரேயன்.

திருத்தங்கள் அறிவுறுத்தியதற்கு நன்றி வாசுதேவன். என் எழுத்துக்களை வரி விடாமல் படித்து விமர்சித்து ஈமெயில் எழுதிய உங்களுக்கு மிகவும் நன்றி.

நந்தாகுமாரன் said...

... சில
...
... பல
... !
மரணித்தே விட்டேனோ?

- இந்த வார்த்தைகளை மட்டும் நீக்கிவிட்டால் இது ஒரு நல்ல கவிதை ... பிடித்திருக்கிறது ...

நந்தாகுமாரன் said...

தவிர தலைப்பை உள்மௌனவெளி என மாற்றி உயிரோசைக்கு அனுப்பி வையுங்கள் ...பிரசுரமாகக் கூடும் ... ஆகாவிட்டால் என்னை அடிக்க வர வேண்டாம் ...

Vidhoosh said...

நன்றி நந்தா. ஆனால் அவற்றை நீக்கிப் பார்த்தால் என்னவோ முழுமை பெறாத அதிருப்தியை கொடுக்கிறது.

:) அடிக்கவெல்லாம் வர மாட்டேன். ஊக்கம் அளித்து என்னை வளர்ப்பதற்கு ரொம்ப நன்றி.

Post a Comment