அந்த 32 பல்லையும் உடைங்கப்பா....

32 பல்லையும் காட்டி கேட்டு வாங்கிய கைமாத்தை, பதில் சொல்லாவிட்டால் திருப்பித் தர மாட்டேன் என்று நசரேயன் சொல்லிவிட்டதால்...(அழைப்புக்கு நன்றி நசரேயன்).


1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
எப்போதும் ஜோக்கடித்துச் சிரித்துக்கொண்டே இருப்பதால் என் அம்மா என்னை விதூஷ் என்றே கூப்பிடுவார். (ஹிந்தியில் விதூஷ் (विदूष) என்றால் clown என்று அர்த்தம்). original பெயர் ஸ்ரீவித்யா- திருவெண்காட்டில் (உள்ள ஆஸ்பத்திரியில்) பிறந்ததால் வைக்கப்பட்டது. படிப்பில் அவ்வளோ சிறப்பில்லை என்றாலும் பள்ளியில் என்னை "சிரி வித்யா" என்று கூப்பிடும் அளவு பிரபலம்.
விதூஷ்-ஷை ரொம்பவே பிடிக்கும்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
மூன்று முறை நம்பிக்கை பொய்த்து, நான்காம் முறை கருவுற்று, டாப்ளர் ஸ்கேனில் என் குழந்தையின் இதயத் துடிப்பைக் கேட்டபோது - ஐந்து வருடங்கள் முன்.

3. உங்கள் கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ரொம்ப பிடிக்கும்.

4.பிடித்த மதிய உணவு என்ன?
தயிர் சாதம் + கறிகாய் எதாஇருந்தாலும். சாப்பிட்ட பிறகு சக்கரைப்பொங்கல் இல்லாட்டா ஏதாவது ஸ்வீட் கண்டிப்பாய் வேண்டும்

5.நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?
விதூஷ் - என்றால் yes.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
கடல்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?.
புன்னகை.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?.
பிடித்தது - இளிச்சவாயா இருப்பது, யாராவது மாட்டினால் - விட்டால் போதும் என்று ஓடும் அளவுக்கு அவரோடு பேசிக்கொண்டே இருப்பது

பிடிக்காதது - பீரங்கி மூக்கின் மேல் கூட வரும் ரௌத்திரம், தேள் கொடுக்கு நாக்கு

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?

பிடித்தது -- பாஸ்கராக இருப்பது

பிடிக்காதது -- மூன்று விஷயங்கள்

1. தினமலர் இணைப்பாக ஞாயிறன்று வரும் வாரமலர் நடுப்பக்கம் தவிர, வேறு எதுவுமே படிக்காத வறட்டு இரசனையைக் கூட "அதுகூட லீவு நாள் என்பதால்" என்ற அவரது இலக்கியப் பெருமை.

2. சிகப்பு நிற close பட்டனை அழுத்திவிட்டு "do you really want to close this window?" என்ற கணினியின் கேள்வியைக் கூட படிக்காமல் cancel செய்யும் அளவுக்கு படிக்கப் பொறுமை இல்லாத தன்மை.

3. என்னை காணவில்லை என்றால் கூட கூகுளில் தேடும் அளவுக்கு போய்விட்ட கணினி அடிமைத்தனம்.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
இந்த தொடர் பதிவை முதலில் ரூம் போட்டு யோசித்த அந்த புண்ணியவான்

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
சிகப்பு சுடிதார். (இது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி)

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
எதுவும் இல்லை. அமைதி.

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு இங்க் - பௌண்டைன் பேனாவில் மட்டும்.

14.பிடித்த மணம்?
விடியற்காலை பவளமல்லி

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?
எண்ண அலைகள் "சுந்தர்" - பி.பி.ஏ. முதல் வருடம் படிக்கும்போது சந்தித்த என் 16 வருட நட்பு. அருமையான சிநேகிதன்(ர்). நன்றாக எழுதுவான்(ர்). அவன்(ர்) மீண்டும் எழுதவேண்டும் என்பதற்காகவே அழைக்கிறேன். ஒரு sample-ளுக்கு இதைப் படியுங்கள்.
மென்பொருள் துறை/வல்லுனர்கள் என்றால் சாருநிவேதிதா போன்றவர்களுக்கு இளப்பமா?

நந்தா- வலை நட்பு. ரொம்ப உரிமையோடும் அலட்சியத்தோடும் வழியும் இவர் கவிதைகள் எனக்குப் பிரியம். ஒவ்வொருக் கேள்விக்கும் கவிதையாக பதில் சொல்லவேண்டும் என்ற அன்புக் கோரிக்கையோடு உங்களை அழைக்கிறேன்.

அடுத்து கூப்பிட வேண்டிய நசரேயன்-தான் என்னை இதில் கோத்து விட்டது. இவரும் வலை நட்பு தான். (நசரேயா. அந்தக் கைமாத்தை மறந்திட வேண்டாம்). அவரும் ஏற்கனவே எல்லா கேள்விக்கும் கரெக்டா தப்பான பதிலையே சொல்லிட்டாரு.

மணிப்பயல் - வலை நட்பு. சிரிப்பு வெடிச் சிங்காரம் என்பதால் ரொம்பப் பிடிக்கும். அவர் எழுதியவை எல்லாமே தனியாக சமைத்துக்கொண்டு இருக்கும்போதுதான் நினைவுக்கு வந்து தொலைக்கும். பக்கத்து flat-இல் இருக்கும் தாத்தா-வே என்னை "ஒரு மாதிரி" பார்க்கும் அளவுக்குச் சிரித்துக் கொண்டிருப்பேன். இவரிடம் இருந்து
//ராசிக்கல்
கோடீஸ்வரன் ஆக ஆசைப்பட்டு
அணிந்துகொண்டேன் ராசிக்கல்லை. - இப்போது
கோடம்பாக்கம் ஓட்டலிலே
கழுவுகின்றேன் தோசைக்கல்லை. // போன்ற அற்புதமான கவிதைகளும் அவ்வப்போது கிடைக்கும்.

குகனை -யும், முத்துகுமாரையும் ஏற்கனவே வாசு கூப்பிட்டு விட்டார்.


16.பிடித்த விளையாட்டு?
ஊஞ்சல், சறுக்கு மரம், சின்ன வயதில் விளையாடிய "முதுகு பங்ச்சர்"

17.கண்ணாடி அணிபவரா?
இல்லை. கண்ணாடி முன்னால் நின்று அலங்காரம் பண்ணிக் கொள்பவர்.

18.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
டீஆர் முதற்கொண்டு கமல், சூர்யா, ஷாரூக் கான், ஹ்ரித்திக் ரோஷன், ஜிம் கேரி, டாம் க்ரூஸ் வரை, டாகுமெண்டரி முதல் டாம் அண்ட் ஜெர்ரி வரை எதையும் விடுவதில்லை. அட...பாத்தாதானே அது எப்படிப் பட்ட திரைப்படம்னு தெரியும்.

வாரணம் ஆயிரம் பட டிரைலரப் பாத்துட்டு, சத்யம் தியேட்டர் போய், பாதி படம் கூடப் பாக்க முடியாம, சூர்யாக்காகவும், அவ்வளோ காசு கொடுத்து வாங்கிய பால்கனி டிக்கட்டுகாகவும் உக்காந்து, ரணம் ஆயிரம் ஆகி வந்து நொந்த கதையெல்லாம் எழுதினாத தெரியும்ம்..ஆங்ங்ங்..

19.கடைசியாகப் பார்த்த படம்?
என் பொண்ணு ஸ்கூல் சுவற்றில் வரைந்த படம்.
வரைந்ததை பார்த்து இரசித்து விட்டு, ஐந்நூறு ரூபாய் fine-வேறு கட்டி விட்டு வந்தேன்.

20.பிடித்த பருவ காலம் எது?
சென்னைக்கு அப்படி ஒரு காலம் வந்தே விட்டாலும், சாலைகள் மோசமாக போனாலும் கூட, கார்பன் கருமை படிந்த மரங்களை குளிப்பாட்டி பச்சையாக்கும் மழைக்காலம்

21.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்
டெஸ்க்டாப்பில் படம் வைத்துக் கொள்வது பிடிக்காது.

22.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம் - அமைதி
பிடிக்காதது - இரைச்சல்

23.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
கணவரை விட்டுத் அம்மா வீட்டுக்குப் போகும் போது ரொம்ப தூரம் வந்துட்ட மாதிரி இருக்கும். திரும்பி "எங்க" வீட்டுக்குப் போகும் போதும் அதே போல இருக்கும்...

24 உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இருந்திருக்கலாம்.. வளர்த்துக்கொண்டிருந்தால்.

25.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
துரோகம்

26 உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
தேள் கொடுக்கு நாக்கு

27. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
அம்மா வீடு

28.எப்படி இருக்கணும்னு ஆசை?
அப்படியே

29.கணவர் இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
அவர் இருக்கும் போது, அவரோடு பேசிக்கொண்டே இருப்பதால், அவர் இல்லாத போதுதான் எழுதுவேன், படிப்பேன். அதனால்தான் இப்போதெல்லாம் நிறைய எழுதுகிறேன்.

30.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
தெரிலங்க.

31..உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
நசரேயனின் கனவுகள் எல்லாமே சுவாரசியமாகத்தான் இருக்கிறது. அதிர்ஷ்டக்காரர் அவர்.

எனக்கெல்லாம் கனவு மேலேந்து கீழ விழுவது போலத்தான் வரும். அப்படியே உருண்டு கட்டில்லேந்து கீழ விழுந்திடுவேன். என்ன? இப்போதெல்லாம் முழிச்சிட்டிருக்கும் போதே அவர் கனவுகளைப் படித்து, சிரிச்சு சிரிச்சு சிரிக்கிறேன், விழுந்து விழுந்து.

என் காதலிக்கு கல்யாணம் என்ற சமீபத்துப் பதிவை ரொம்பவே இரசிச்சேன்.

நகைச்சுவையாய் எழுதுவது இன்னும் எனக்கு கைகூடவில்லை. ஆனால் இவரது பின்னூட்டங்கள் நான் எழுதுவதை எல்லாம் நகைச்சுவை ஆக்கி விடுவதில் ஒரு மகிழ்ச்சிதான்.

32.இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்த‌க‌ம்?
மொழிபெயர்ப்புத்தொழில் நிமித்தம், "அருணாச்சல மகாத்மியம்" மூன்று மொழிகளில்.

33. இந்த தொடர் பதிவை முதலில் ரூம் போட்டு யோசித்த அந்த புண்ணியவான் யார்?
பதில் தெரிந்தவர்கள், இந்தப் பதிவின் தலைப்பில் உள்ள கட்டளையை நிறைவேற்றுங்கள் என்றே கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்.

8 comments:

யாத்ரா said...

உங்கள் பதில்களை மிகவும் ரசித்தேன்.

நசரேயன் said...

இப்போதைக்கு கடைசி கேள்விக்கு பதில், நீங்க ஆட்டோ அனுப்ப வேண்டிய இடம்
நிலாவும் அம்மாவும்

வால்பையன் said...

//என்னை காணவில்லை என்றால் கூட கூகுளில் தேடும் அளவுக்கு போய்விட்ட கணினி அடிமைத்தனம்.//

வருத்தத்தைக் கூட எவ்வளவு நகைச்சுவையா சொல்றிங்க!

கிரேட்!

நந்தாகுமாரன் said...

எழுதிவிட்டேன் ... நன்றி

நசரேயன் said...

//(நசரேயா. அந்தக் கைமாத்தை மறந்திட வேண்டாம்).//

வங்கி கணக்கு விவரம் கொடுங்க, அனுப்பி வைக்கிறேன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

ரசனையோடு, அதுவும் அந்த தேள் கொடுக்கு நாக்கு

மீ த சேம்

அமிர்தவர்ஷினி அம்மா said...

பக்கோடா பேப்பர்கள் - இதிலேயே உங்களின் நகைச்சுவைத் தன்மை தெரிகிறது.

Vidhoosh said...

நன்றி அமிர்தவர்ஷிணி அம்மா.:)

Post a Comment