நாகரிகம்

"சீ.. உன் வீட்டில் பெண்ணில்லையா!"
தொடையில் கீறல் பட்டதும் சீறினாள்
மினி ஸ்கர்ட் நங்கை... வக்கிரன்தான்,
இருந்தாலும் சொன்னான்
"என் வீட்டுப் பெண்ணென்றால்
தொண்டை
கிழிபட்டிருக்கும்."



.

3 comments:

நந்தாகுமாரன் said...

இது சத்தியமா கவிதை இல்லைங்க :(

Vidhoosh said...

பின்ன?
அப்ப கோவமாய் எழுதினதுனால கோ(வ)தை-ன்னு வச்சுக்கலாமா?
இல்லை வெறுமனே வதை கூட சொல்லுங்கள். அதுக்காக உங்க ஊர் பெண்களை விட்டு பிங்க் ஸ்லிப் எல்லாம் கொடுக்க சொல்ல வேண்டாம்.
வீக்-எண்டா இருந்தாலும் பரவல்லைனு விடியற்காலையில் என்னைத் தொடர்ந்து நாலு நாலா ப்ளாக வெச்ச பைத்தியக்காரன் மற்றும், ஊக்குவித்து (உசுப்பேத்தி) மகிழும் நந்தாவிற்கும் கோடானு கோடி நன்றிகள்.

Radhakrishnan said...

ஆஹா, கவிதையை மிகத் தைரியமாக அதே வேளையில் மிகவும் சோகமாக சத்தியம் செய்து கவிதை இல்லை என்று சொல்லி இருக்கிறாரே நந்தா.

பெண்ணின் சுதந்திரத்தைச் சுட்டிக்காட்டும் ஒரு அழகிய கவிதை. என் வீட்டுப் பெண் எனில் என்னால் அடக்கி ஒடுக்கி வைக்க முடியும் எனச் சொல்லும் ஆணாதிக்கம்.

நாகரிகம் எனும் பெயரில் அநாகரிகமாகத் திரிய வேண்டாம் என்பதை அநாகரிகமாகவே வெளிப்படுத்தும் போக்கு என கவிதை சமூகத்தைச் சாடுகிறது.

மிக்க நன்றி வித்யா அவர்களே.

Post a Comment