ஊக்குவிப்பும், ஊக்குக்குத்தும்

இன்றையக் காபிக்கும் முன்னே இதை எழுதிப்போடுகிறேன்.

//sssuuuppப்eeerrr ... உங்களுக்கு உரையாடல், கதை, கட்டுரை லாவகமாக வருகிறது ... கவிதையை என் போன்ற சிறுவர்களிடம் விட்டுவிட்டு நீங்கள் இதைத் தொடருங்கள் .....//

ஒரே நேரத்தில் இப்படி ஊக்குவித்தும், ஊக்குக்குத்தும் கொடுத்து என் பாதைக்கு வெளிச்சம் காட்டிய நந்தாவிளக்கே காரணம். இன்னும் நாலு நாளைக்கு தலை போகும் வேலை உள்ளது என்றாலும், பிறந்தகம் போல என் மனம் இங்கேயேதான் இருக்கும்.
-------------
"வென்றவர்களின் வரலாறு அளவுக்கே தோற்றவர்களின் வரலாறும் முக்கியம் என நமக்கு கற்பித்தது பின்நவீனத்துவமே." எழுத்தாளர் ஜெயமோகன்
--------------
அது நீயாகத்தானி ருக்கும்
என் கண்ணாடியில்
உன் பிம்பம்

என்று அலட்சியமாகவும்

அதென்ன சிவப்பாய் - போகாதே
அங்கே சூரியன்தான்... வானின்
முதுகில் குத்திவிட்டது

என்று பிரபாகரனுக்காக வருத்தப்பட்டும்...

நெளிந்தும் வளைந்தும்
நகர்ந்தும் பெயர்ந்தும்
வெளுத்தும் சிவந்தும்
வாழ்கிறேன் நான் மென்பொருள் ஊழியன்

என்று கம்யூனிஸ்ட்த்தனமாகவும் (ஒரே சிரிப்புத்தான்..)

நந்தா என்றொரு நண்பராம் - என்
கவிதைப் படிச்சு சிரிச்சாராம்
எல் ஐ சி மேலேந்து குதிச்சாராம்
திருப்பி படிச்சு அழுதாராம்

என் சின்னப்புள்ளத்தனமாக ரைம்ஸும்

அடியடியாய டித்தாலு மொரடிகூட அடிக்கா
மலெழுதமாட்டா ளிவள்

என்று திருவள்ளுரை இம்ப்ரெஸ் செய்தும் (அது இன்ஸ்பயர் தான) கூட எழுதுவேன்.

விடுவிடுவென்றாலும் விடமாட்டேன் விளங்கும் வரை
விடுவிடுவென வந்தேன் நந்தா விளக்கு
என்றும் கெஞ்சு...வேன்

ஒரு பெரிய மலை
உருண்டது ஒரு தலை
சாயுதே மாலை
பெய்யுதே மழை
நான் பேப்பர் தின்னும் கழுதை
வந்தததே அழுகை
புரியலியே உம் கவிதை - முடிந்தால்
புரிந்து கொள்ளும் இதை

என்று டி.ஆர் ரேஞ்சிலும் எசப்பாட்டு எழுதி அடம்பிடிப்பேன்.

இருந்தாலும் அது நீங்க அன்றிரவு சாப்பிட்ட மீன், மலையாடு (த்தலை), மற்றும் புறாக்கறிகளோ?

என்ன செய்வது? புரியாததை புரிய ஆசைப்படும் நான் ஒரு பின்நவீனத்துவவாதியே (ரொம்ப பின்னால் இருக்கும் நவீனத்துவவாதி என்றும் கொள்ளலாம்), ஏதோ நோயாகவும் இருக்கலாம். இல்லை.. எனக்குத்தான் ரொம்ம்...ப வயதாகிவிட்டதோ?

கவிதையால் கெஞ்சிக் கேட்டேன், அப்படிக்கூட
கிடைக்கவில்லை அங்கீகாரம்,
நடை பழகும் மக்கு தானே நான், என்னை
கொக்கு என்று நினைத்தாயோ கொங்கணவா நீ....

1 comments:

நந்தாகுமாரன் said...

:) ... என் comment வாபஸ் ... பின்நவீனத்துவமென்றெல்லாம் சொல்லி பயம் காட்டுகிறீர்களே ... ஜெயமோகனின் quote வேறு ... கட்டுரையின் நடுவே வரும் உங்கள் கவித்தாண்டவங்கள் ரசிக்ககும்படி தான் இருந்தன (இந்த இடத்தில் பயன்படுத்தியதால் மட்டும் ... இதை நீங்கள் தனியே எழுதியிருந்தால் என் கருத்து வேறு மாதிரி இருந்திருக்கும்) ... நீங்கள் தாராளமாகக் கவிதையும் எழுதுங்கள் ... ஆனால் எனக்கு எரிச்சல் வந்தால் சொல்லிவிடுவேன் ... see u after 4 days

Post a Comment